போதை குரலில் பாட முடியுமா..? ; பாடகியை திகைக்க வைத்த சி.எஸ்.அமுதன்

226

Ranina_Reddy

‘எவண்டி உன்ன பெத்தான்.. கைல கிடைச்சா செத்தான்’ என சிம்பு ஒரு பாடல் பாடினாரே, அதேபோல இயக்குனர் சி.எஸ்.அமுதன் தற்போது தான் இயக்கிவரும் ‘தமிழ்படம் 2.O’ படத்தில் எவன்டா உன்னை பெத்தான் என பெண்களின் சார்பாக ஒரு பாடல் வைத்துள்ளதும் தெரிந்த செய்திதான்..

இந்த பாடலை பாடியுள்ளவர் ரணினா ரெட்டி என்கிற பாடகி. இந்தப்பாடலுக்காக ஆடிசன் நடந்தபோது, “எனக்கு சூப்பர் வாய்ஸ் எல்லாம் வேண்டாம்.. குடித்துவிட்டு போதையில் பாடுவது போன்ற குரல் தான் வேண்டும்” என இயக்குனர் அமுதன் கூற, ரணினாவின் குரல் அவர் எதிர்பார்த்தது போலவே அமைந்துவிட்டதாம்.

அந்தப்பாடல் ஹிட்ட்டானதை தொடர்ந்து, விஜய்சேதுபதி நடிக்கும் ‘ஜூங்கா’ படத்தில் இவர் பாடிய ‘கூட்டிப்போ கூடவே’ என்கிற பாடலும் ஹிட்டானதில் சந்தோஷத்தில் இருக்கிறார் ரணினா ரெட்டி.

Comments are closed.