சமூக உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக உணர்வுப்பூர்வமான படங்களை தருபவர் இயக்குனர் ராஜூ முருகன்.. இவர் இரண்டாவதாக இயக்கிய ஜோக்கர் படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், திரைப்பட விருதுகளையும் அள்ளி வந்தது.
தற்போது பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தின் வசனத்தை எழுதி வருகிறார் ராஜூ முருகன்.. இதையடுத்து ஜீவா நடிபில் சமகால சமூக விஷயங்களை உள்ளடக்கிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படத்திற்கு ‘ஜிப்ஸி’ என டைட்டில் வைத்து அதை இரவு 12 மணிக்கு அறிவித்துள்ளனர்.

Comments are closed.