பழைய படங்களை புது மெருகேற்றி டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தொடர்ந்து கமலின் படமும் அடுத்தததாக டிஜிட்டலில் ரிலீசாக உள்ளது.
கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘காக்கி சட்டை’. இதில் கமலுடன் அம்பிகா, சத்யராஜ் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார். சத்யா மூவீஸ் தயாரித்த இந்தப் படம் மிகப் பெரிய வசூலைக் குவித்த படமாகும்.
தற்போது டார்வின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இந்தப்படத்தை டிஜிட்டலில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் உலகெங்கும் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Comments are closed.