தானா சேர்ந்த கூட்டத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா..?

250

tsk names

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கல் ரிலீசாக சில தினங்களுக்கு முன் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ரிலீஸ் படங்களிலேயே முதல் படமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எண்பதுகளின் காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை என்பதால் இந்தப்படத்தில் சில விஷயங்களை அழகழகாக சேர்த்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அந்த வகையில் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பெயர்களை எல்லாம் நச்சினார்கினியன், குறிஞ்சிவேந்தன், அழகுமீனா, ஒண்டிவீரன், உத்தமன், வெற்றிவேல், மங்கையர்க்கரசி என தூய தமிழ்ப்பெயர்களாக வைத்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கூட காதம்பரி, கிள்ளி வளவன் என அவர் தமிழ்ப்பெயர்களாக சூட்டியதும் இப்போது உங்கள் ஞாபகத்திற்கு வந்துபோகுமே.

Comments are closed.