ஜீவன் நடித்த ‘ஜெயிக்கிற குதிரை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சாக்ஷி அகர்வால்.. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் இருந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் சாக்ஷி அகர்வால்.
‘ஓராயிரம் கினாக்கள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக பிஜுமேனன் நடிக்க அவரது மனைவியாக நடிக்கிறார் சாக்ஷி அகர்வால். சராசரி வாழ்க்கை வாழும் சிலர் தங்களது கனவுகளை அடைய குறுக்கு வழியை பயன்படுத்துவதை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை காமெடி த்ரில்லராக உருவாகி வருகிறதாம்.

Comments are closed.