ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தனயன்’. இந்தப்படத்தில் கதாநாயகனாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை N.J.சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சதீஷ் வேறு யாருமல்ல.. சாட்சாத் ஜெய் ஆகாஷே தான். ஆம். தனது சொந்தப்பெயரில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஜெய் ஆகாஷ்.
கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். யு.கே.முரளி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது..
இயக்குனர் கே.பாக்யராஜ் வாழ்த்தி பேசியபோது ஜெய் ஆகாஷ் குறிப்பிட்ட அந்த ‘நல்ல நேரம்’ பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். “நல்ல நேரம் பற்றி ஜெய் ஆகாஷ் பேசினார். அது உண்மை தான். ஜெய் ஆகாஷ் இங்க இருந்து தெலுங்குல போய் ஹிட் படங்களா கொடுக்கிறதுக்கும், இங்க இன்னும் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியலையேன்னு வருத்தப்படுறதுக்கும் அந்த நேரம் தான் காரணம்.
கடின உழைப்புடன் நமது நேரமும் நன்றாக இருந்தால் வெற்றி நம்மை தேடிவந்தே தீரும். நடிகர் விக்ரம் அப்படி பல வருட போராட்டத்தில் தனக்கு ஏற்பட்ட பல தோல்விகள், தடைகளை தாண்டித்தான், இன்று மிகப்பெரிய ஹீரோவாக வலம்வருகிறார். அதேபோல ஜெய் ஆகாஷுக்கும் அவரது நேர்மையான உழைப்புக்கான பலன் விரைவில் கிடைத்தே தீரும்”
ஜெய் ஆகாஷ் ஒவ்வொரு படத்தின் ஸ்க்ரிப்ட்டிற்கும் நல்ல கவனமும் நிறைய நேரமும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஸ்கிரிப்ட் தான் உங்களை பேசவைக்கும். ஸ்பாட்டிற்கு வந்தபின் தான் ஜெய் ஆகாஷ் வசனம் எழுதுவார் என பானுசந்தர் சொன்னார்.. நானும் அதேபோலத்தான். அந்தளவுக்கு மனதிற்குள் ஸ்கிரிப்ட் ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படி திரைக்கதை விஷயத்தில் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் நீங்கள் தாராளமாக என்னை அணுகலாம். நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்” என வாழ்த்தினா

Comments are closed.