ஜூங்காவுக்காக விஜய்சேதுபதியின் புதிய லுக்..!

197

junga

கெட்டப்பை மாற்றுவதில் கமலுக்கு அடுத்த இடத்தை விஜய்சேதுபதி பிடித்துவிடுவார் போல தெரிகிறது.. படத்துக்குப்படம் நடிப்பில் மட்டுமல்ல, கெட்டப்பிலும் சற்றே வித்தியாசம் காட்டிவரும் விஜய்சேதுபதியில் லேட்டஸ்ட் கெட்டப் ‘ஜூஞா’ படத்திற்காகத்தான். ஹேர்ஸ்டைலை மாற்றி, வண்டு அளவில் உள்ள சிறிய தாடியுடன் விஜய் சேதுபதி இந்தப்படத்தில் நடிக்கிறார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு, கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். முந்தைய படம் போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ நாயகி சாயிஷா சைகல் படத்தின் நாயகியாக நடிக்கிறார் யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் ‘ஜூங்கா’ படத்தில் நடிக்கிறார்கள் இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது

அதனால் ‘ஜூங்கா’ திரைப்படம். இப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது

Comments are closed.