‘குறள் 388’ மூலமாக தமிழில் அறிமுகமாகும் மோகன்பாபு மகன்..!

259

Vishnu Manchu 1

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ‘குறள் 388’. தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப்படம் தயாராகிறது.. இந்தப்படத்தில் தெலுங்கில் “வோட்டர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார். இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் G.S.கார்த்தி.

உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப் படாத கருத்துக்கள் எதுவும் இல்லை
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

என்ற 388 வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதைக் கரு. பரபரப்பான இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக படம் உருவாகிறது. இந்த படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும். இதில் காதல் மோதல் காமெடி எல்லாம் இருக்கு என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் விஷ்ணு மஞ்சு. விஜய தசமி அன்று எனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் விஷ்ணு மஞ்சு.

Comments are closed.