கரு.பழனியப்பன் – அருள்நிதி இணையும் அதிரடி அரசியல் படம்..!

239

karu palaniyappan - arulnithi

எந்த மேடையாக இருந்தாலும் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகிறார் என்றாலோ, அல்லது தொகுத்து வழங்குகிறார் என்றாலோ அதை ரசிப்பதற்கென்றே தனிக்கூட்டம் இருக்கும்.. காரணம் போகிற போக்கில், சமூக, அரசியல் கருத்துக்களை நறுக்கு தெறித்தாற்போல நையாண்டியாக கூறுவதில் வித்தகரும் கூட. அப்படிப்பட்டவர் அரசியல் நையாண்டி படத்தையே இயக்கினால்..?

சந்தேகமே வேண்டாம்.. அவரது அடுத்த படம் அரசியல் நையாண்டி படமாகத்தான் உருவாக இருக்கிறது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன் வெளியான ‘ஜன்னல் ஓரம் ‘படத்தை தொடர்ந்து இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் கரு.பழனியப்பன் லைம்லைட்டுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.