“பர்னபாஸ் வாக்கு பைபிள் வாக்குலே” ; உற்சாகத்தில் அழகம் பெருமாள்..!

254

azhakm perumal

சமீபத்தில் வெளியான தரமணி படத்தில் ‘பர்னபாஸ்’ வேடத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த, இப்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிற இயக்குனர் அழகம் பெருமாளுக்கான வரலாறு சாதரானமானதல்ல. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து 1989லேயே இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்ற துவங்கியாவர். இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் திரைப்படமே சூப்பர்ஸ்டார்-மெகாஸ்டார் இணைந்து நடித்த ‘தளபதி’.

அப்போது ஆரம்பித்து இப்போது வரை இயக்குநர் மணிரத்னத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் இவர்தான், மணிரத்னம் இயக்கிய குரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதியாவரும் கூட.. அதுமட்டுமல்ல ரோஜா, பம்பாய், கடல் போன்ற படங்களில் இடம்பெற்ற திருநெல்வேலி நாகர்கோவில் வட்டார தமிழ் வசனங்களும் இவர் கைவண்ணம் தான்.

அதன்பின் விஜய், சிம்ரன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘உதயா’, மணிரத்னம் தயாரித்த ‘டும் டும் டும்’ ஆகிய படங்களை இயக்கினார். இப்போது இடைவிடாமல் படங்களில் நடித்து வருகிறார். தரமணியில் ‘பர்னபாஸ் வாக்கு பைபிள் வாக்குலே’ என இவர் சொல்லும்போது கைதட்டல் பறக்கிறது. “ராம் என்னிடம் கதை சொல்லும் போது இந்த காட்சிகள் இவ்வளவு ஸ்ட்ராங்காக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் அழகம் பெருமாள்.

“மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இவ்வளவு நாள் படம் இயக்காமல் கேப் விழுந்துவிட்டது. அதற்கு எல்லாம் பதில் செல்லும் வகையில் நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்” என்கேறார் நடிகர் அழகம் பெருமாள்.

Comments are closed.