தேசிய விருது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘8 தோட்டாக்கள்’..!

173

8 tottakkal

பார்ப்பதற்கு பள்ளிக்கூட மாணவன் போலவோ அல்லது கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் போலவதான் இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.. ஆனால் சீனியர் நடிகர்களான நாசர் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும் வேலை வாங்கியதில் பெண்டு நிமிர்த்தி விட்டார் என்றால் நம்பத்தான் முடியவில்லை.

ஆம்.. ‘8 தோட்டாக்கள்’ என்கிற பெயரில் தயாராகி இருக்கும் படத்தின் இயக்குனர் தான் இந்த ஸ்ரீகணேஷ்.. ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து துப்பாக்கி ஒன்று களவு போகிறது… அந்த துப்பாக்கி சிக்கக்கூடாதவர் கைகளில் சிக்க, அதில் இருந்த எட்டு தோட்டாக்கள் வெவ்வேறு எட்டு இடங்களில் வெடிக்கிறது. இதனால் யாருக்கு என்ன பாதிப்பு என்பதை மையப்படுத்தி ஒரு க்ரைம் திரில்லராக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார் ஸ்ரீகணேஷ்.

கதாநாயகன், நாயகியாக புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்க, இவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.. இந்தப்படஹ்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நாசர்,

“இளம் திறமையாளர்களால் தமிழ் திரையுலகமே தற்போது நிரம்பி கொண்டிருக்கின்றது. விரைவில் அந்த வரிசையில் இணைய இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அவர் என்னிடம் இந்த கதையை கூறும் போது கூட எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை வரவில்லை, ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் படக்குழுவினரை கையாண்ட விதம் என்னை முழுவதுமாக வியப்பில் ஆழ்த்தி விட்டது. எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ஒரு காட்சியை பார்த்துவிட்டு நான் மெய்சிலிர்த்து போய்விட்டேன். அவரின் இந்த ஒரு காட்சிக்கு எம்.எஸ்.பாஸ்கர் நிச்சயமாக தேசிய விருதை பெறுவார்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் நாசர்.

Comments are closed.