‘54321’ த்ரில்லர் படம் மூலம் ஜோஷ்வாஸ்ரீதர் ரிட்டர்ன்ஸ்..!

191

குறை சொல்வதாக நினைத்தாலும் பரவாயில்லை.. தமிழில் டைட்டில் வைப்பதற்கு பஞ்சம் வந்துவிட்டது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் போல இருக்கிறது.. பின்னே ‘54321’ என நம்பர்களில் தலைப்பு வைக்கும் அளவுக்கு இயக்குனர்கள் இறங்கிவிட்டார்கள் என்றால் வேறு எப்படி சொல்வதாம்..?

ஆனால் 54321’ படத்தின் இயக்குனர் ராகவேந்திரா பிரசாத்தோ படத்தின் கதைக்கேற்ற மாதிரித்தான் டைட்டிலை வைத்துள்ளோம் என்கிறார். அதாவது 4 விதமான லைப்ஸ்டைலை கொண்டுள்ள 5 பேர் வாழ்க்கையில் 2 மணி நேரத்தில் நடக்கும் 3 கொலைகளும் 1 பழிவாங்கலும் தான் கதையாம். 2 மணி நேர த்ரில்லருக்கு உத்தரவாதம் என்கிறார்.

படத்தின் கதையும் 120 நிமிடங்களில் நேரத்தில் நடக்கும் த்ரில்லிங்கான சம்பவங்கள் தானாம். ‘ரம்மி’ படத்தில் நடித்த ஆர்வின் கதாநாயகன். கன்னட நடிகை பார்வதி என்பவர் தான் ஹீரோயின். ‘காதல்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜோஷ்வாஸ்ரீதர், ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்னர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Comments are closed.