2௦ நாட்களில் 5௦ஆயிரம் சிறுகதைகள்.. குட்டீஸ்கள் சாதனை

177

குழந்தைகள் ரசிக்கும் விதமாக படங்கள் வருகின்றன. அதில் பெரியவர்களின் காமெடிதான் குழந்தைகளை சிரிக்க வைக்கிறது. ஆனால் குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்கள் வருவதென்னவோ குறைவுதான். அந்த குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘கத சொல்ல போறோம்’.

இந்தப்படத்தின் இயக்குனரான எஸ்.கல்யாண் மற்றும் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் இருவரும் சேர்ந்து இன்றைய குழந்தைகளுக்கு கதை எழுதும் திறன் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய சிறுகதைப்போட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

இன்றைய குடும்பச்சூழலில் குழந்தைகளுக்கு கதை கேட்கும் வாய்ப்பு குறைவு.. அதனால் குழந்தைகள் எப்படி கதை எழுதி அனுப்போகிரார்கள் என நினைத்தால், ஆச்சர்யப்படும் வகையில் போட்டி அறிவித்த 2௦ நாட்களிலேயே 5௦ஆயிரம் சிறுகதைகள் வந்து குவிந்துவிட்டனவாம்.. இன்னும் சில நாட்களில் இது ஒரு ஒரு லட்சமாக உயர்ந்தாலும் வியப்பில்லை என்கிறார்கள் இருவரும்.

Comments are closed.