வகைதொகையில்லாமல் சென்னையையே வளைத்து கட்டிய ‘வர்தா’ புயலின் தாக்கம் ரொம்பவே அதிகம்.. இப்போதுதான் ஓரளவு பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள தொடங்கியுள்ளனர். இந்த ‘வர்தா’ புயல் ஷங்கர் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் நடித்துவரும் ‘2.O’ படத்திற்காக போடப்பட்ட செட்டையும் பிய்த்து எறிந்துவிட்டதாம்.
சென்னை அம்பத்தூரில் உள்ள ஐ.டி.பார்க் ஒன்றில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு இந்தப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தனவாம். புயல் செய்தி கேள்விப்பட்டவுடன் கடந்த ஞாயிறு அன்று கூட லீவு விடாமல் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் ஷங்கர்.. திங்கள் கிழமை வழக்கம்போல படப்பிடிப்பு நடத்த வந்தவர்கள், புயலின் தீவிரத்தை கண்டு, வந்த சிறிது நேரத்திலேயே படப்பிடிப்பை கேன்சல் செய்து கிளம்பிவிட்டனராம்.

Comments are closed.