2௦13ல் 106/34.. இப்போ 107/35.. எகிறும் ரன் ரேட்டில் நா.முத்துகுமார்..!

203

 

வார்த்தைகளில் வசியமருந்தை குழைத்து இளைஞர்களை மயக்குவதில் கவிப்பேரரசுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்றால் அது நா.முத்துக்குமார் தான். கடந்த பத்து ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பதினோராவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

இந்த வருடத்தில் அதிக படங்களில், அதிக பாடல்கள் எழுதியவர் என்கிற பெருமையை தட்டிச்செல்கிறார் நா.முத்துக்குமர். அதிலும் 35 படங்களில் 107 பாடல்கள் என்பது மிகப்பெரிய சாதனை தான். சொல்லப்போனால் கடந்த வருடம் 34 படங்களில் 106 பாடல்கள் எழுதிய தன் சாதனையை தானே முறியடித்திருக்கிறார் நா.முத்துகுமார்.

இதில் 10 படங்களில் அனைத்துப்பாடல்களையும் எழுதியிருப்பது இன்னொரு சாதனை. ஆச்சர்யப்பட வைக்கும் இன்னொரு செய்தியாக தற்போது 1௦௦ படங்களுக்கு மேலும் இவர் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் 26 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதுகிறார்.

இதில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டுமல்லாது அறிமுக இயக்குனர்களின் படங்களும் அடக்கம். இதுதவிர தான் எழுதிய பாடலுக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் இவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்திருக்கிறது.

ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தருவது, இயக்குனர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பது, பிரபலங்கள், புதுமுகங்கள் என பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் சரிசமமான பங்களிப்பை தருவது இவைதான் நா.முத்துக்குமாரை எப்போதும் உயரத்திலேயே வைத்திருக்கின்றன. தொடரட்டும் நா.முத்துக்குமாரின் வெற்றிப்பயணம்.

Comments are closed.