
இதோ அதோ என ரசிகர்களிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிவந்த ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் வரும் அக்-21ல் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரிலீசாக இருக்கிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
வரும் 21ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட தொடர்ந்து ஐந்துநாட்கள் ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சரியான நேரத்தில் தான் இந்தப்படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் விக்ரம், மீண்டும் ‘ஜெமினி’ பாணியிலான அதிரடிக்கு திரும்பியிருப்பதால் வரும் தீபாவளி வரை இதன் ஓட்டம் நான்ஸ்டாப்பாக இருக்கும் என்பதும் உறுதிதான்.
Comments are closed.