மெகா ஹிட் திரைப்படம் ‘அரண்மனை 3’ ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது

310

aranmanai-3
இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12 அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

சுந்தர்.c இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

Comments are closed.