நாகார்ஜுனா தான் கார்த்தியின் ரோல் மாடலாம்..!

176

thozhas

தெலுங்கில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தாலும், என்றும் மாறாத புன்னகை முகத்துக்கு, இளமை துள்ளலுக்கு சொந்தக்காரர் தான் நாகார்ஜுனா. அப்படிப்பட்ட நாகார்ஜுனாவுடன் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தோழா’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார் கார்த்தி. படம் வெற்றிபெற்று, அதற்காக நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் நாகார்ஜுனாவை பற்றி குறிப்பிடுகையில் அவர்தான் தனக்கு ரோல் மாடல் என கூறினார் கார்த்தி.

ஆம்.. கார்த்தி பத்தாவது படிக்கும்போதே நாகார்ஜுனாவின் படங்களை பார்த்து, பின்னாளில் நாமும் இவரைப்போலவே எப்போதும் உற்சாகத்துடன் இருக்கவேண்டும் என தீர்மானம் எடுத்துக்கொண்டாராம். இப்போது ‘தோழா’ படத்தில் அவருடன் இணைந்து நடித்தபோது தான் நாகார்ஜுனாவின் படங்களில் அவரை பார்த்து வியந்த அந்த உற்சாக துள்ளலை நேரிலேயே பார்த்து வியந்தாராம் கார்த்தி. வாய்ப்பு கிடைத்தால், ஒருவேளை அடுத்து தோழா-2 உருவானால் மீண்டும் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் கார்த்தி.

Comments are closed.