தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக தயாரிப்பாளர் செந்தில் வி.தியாகராஜன் தேர்வு

335

senthil-thyagarajan
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், ஹெல்த் கேர் எண்டர்பிரனர் (Health Care Entrepreneur) நிறுவனத்தின் உரிமையாளருமாகிய செந்தில் வி. தியாகராஜன் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனின் பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ட்ராக் அண்ட் ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் தேசிய அளவிலான தடகள வீரரான செந்தில் வி.தியாகராஜன், சர்வதேச ரக்பி விளையாட்டில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரேக் அவர்களின் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார்.

மேலும், இவர் தமிழ்நாடு ரக்பி விளையாட்டு கழகத்தின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் பொறுப்பிலும் இருக்கின்றார். அதுமட்டுமின்றி, இவர் Management Information Systems and International Trade and Relations from California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆக இரண்டு முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

Comments are closed.