
நபீஹா மூவி புரொடக்ஷன்ஸ் சார்பில் நுபய்ஸ் ரஹ்மான தயாரிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார்.
காதல் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இபப்டத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறிப்பாக டீசர் ஒன்றில் இடம் பெற்ற சில காட்சிகளில் கதாநாயகி சுபிக்ஷா, முத்த மழையில் நாயகன் ருத்ராவை நனைத்திருக்கிறார். இந்த டீசர் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜான், தமிழகத்தில் ஒரு இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும், என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையால் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் பற்றிய செய்திகள் பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், படத்தின் முத்தக்காட்சிகளோடு வெளியாகியிருக்கும் டீசரால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Comments are closed.