சசிகுமாரின் ‘காரி’ நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது

218

காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’.

சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ’சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ள இப்படத்த்யில் சசிகுமாருக்கு ஜோடியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். ஜேடி சக்கரவர்த்தி வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார், பிக் பாஸ் சக்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments are closed.