குட்டீஸ்களுக்கு ‘24’ வாட்ச் இலவசம்..!

184

24 watch
சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘24’ படத்தில் இடம்பெற்றுள்ள வாட்ச்சுக்கு படத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கருவியான அந்த வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கள் குடும்பத்தோடு படத்தைப் பார்க்க வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் 24 வாட்சை பற்றி ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். இப்போது குழந்தைகளை குஷிப்படுத்தும் முயற்சியாக, விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் 24 திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக வாட்ச் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

Comments are closed.