‘ஜீ’ தமிழுக்கு உதயநிதி தந்த லட்டு..!

82

சரத்குமார் நடித்த ‘ஜானகிராமன்’, மோகன்லால் நடித்த ‘மிஸ்டர்.பிரம்மச்சாரி’.. இந்த இரண்டு படங்களுக்கும் உதயநிதி நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. மேற்கண்ட இரண்டு படங்களிலும் ஆஞ்சனேய பக்தர்களாக இருக்கும் ஹீரோக்கள், திடீரென ஒரு பெண் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்போது எப்படி பிரம்மச்சார்ய விரதம் கலைகிறார்கள் என்பதுதான் கதை.

உதயநிதிக்கும் இதேதான் கதை.. நயன்தாரா தான் உதயநிதியின் விரதம் கலைக்கும் மோகினி. இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் புத்திசாலி.. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்து படத்தை எடுத்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்தப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு தவிர்த்த பகுதிகளில் வெளியிடும் உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய விலைகொடுத்து ‘ஜீ’ தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.