யாரைக் அடக்கப்போகிறது ‘அங்குசம்’ ?

94

‘அங்குசம்’ படத்தின் இயக்குனர் மனுகண்ணன் தனது முதல்படம் வெளிவரும் முன்னரே கவனிக்கத்தக்கவராக மாறியிருக்கிறார்.. ‘தகவல் அறியும் உரிமை சட்டம்.’ பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் முழுதுமாக ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்த சட்டத்தைப் பற்றி பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கமான படத்துக்குறிய மசாலாக் கலவையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘அங்குசம்.’தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பல நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் வந்த செய்திகளின் தாக்கம் தான் தன்னை இந்தப்படமெடுக்க தூண்டியது என்கிறார்.

ஆனால் ‘அங்குசம்’ படத்திற்கு சென்சாரில் பிரச்சனைகள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. என்ன நடந்தது என இயக்குனரிடம் கேட்டால், “உண்மைதான். ஆனால் தவறான புரிதலுடன் நடந்த சம்பவம் அது. தமிழக முதல்வரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சரையோ தவறாக பேசப்படவோ சித்தரிக்கப்படாத நிகழ்ச்சிக்கு கிடத்த வெகுமதி. சில அரசாங்க அதிகாரிகளின் தாந்தோன்றித்தனமான செயலால் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் பழியை சுமக்கும் அவலம். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக முதல்வரின் நிர்வாகத்திறனை புகழும் படத்திற்கு கூட இந்தப்பிரச்சனையா” என்கிறார் மனுகண்ணன் வேதனையுடன்.

Leave A Reply

Your email address will not be published.