சூர்யாவுடன் ‘சிங்கம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கனகச்சிதமான நகைச்சுவை கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் விவேக். தொடர்ந்து இப்போது லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் ‘அஞ்சான்’ படத்திலும் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார் விவேக்.
பத்து வருடங்களுக்கு முன் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக விவேக்கின் காமெடியும் ரொம்பவே பேசப்பட்டது. லிங்குசாமி, சூர்யா இருவருடனும் மீண்டும் இணையும் விவேக்கிற்கு படம் முழுவதும் வருகிற மாதிரியான முக்கியத்துவம் உள்ள வேடமாம். தற்போது ‘நான் தான் பாலா’ படத்தில் சீரியஸான ரோலில் நடித்துவரும் விவேக் ‘அஞ்சான்’ படம் மூலம் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என தாராளமாக நம்பலாம்.