கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்ததாக ‘சிகப்பு’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படமும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என பெயர் வைத்துள்ளார்கள்.
இது மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தின் ரீமேக் ஆகும். ராஜ்கிரண், தம்பிராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனேகமாக நஸ்ரியா நடிக்கலாம் என தெரிகிறது.
மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனும் ராடன் பிக்சர்ஸ் சார்பாக ராதிகாவும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.