விஜய், மோகன்லால் நடித்துவரும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.டி.நேசன் இயக்குகிறார். சென்னையில் ஏற்கனவே இரண்டுகட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார்கள். இந்தப்படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்காக ஹைதராபாத் செல்வதாக, மோகன்லால் தனது ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது, வரும் செப்-9ஆம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்’கை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு படப்பிடிப்பு வேலைகள் நடந்துவருகின்றன.
இதே பொங்கல் திருநாளில்தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படமும் ரிலீஸாக இருக்கிறது. அஜீத், விஜய் இருவரின் ரசிகர்களும் முன்புபோல இல்லாமல், நட்புடன் இந்த ரிலீஸ் கோலாகலத்தை கொண்டாடுவார்கள் என்பது உறுதி.