புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர்கள் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான ‘அண்ணாதுரை’ யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நவ-15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது.
‘அண்ணாதுரை’ படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான ‘www.vijayantony.com ‘ மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம்.
இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, காளி வெங்கட், ஜ்வல் மேரி, நளினிகாந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார்.
Comments are closed.