சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு படத்தின் க்ளாசிக் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபு அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார். படத்தின் பெயர் 1-நேனொக்கடினே. இந்தியில் வெளியாகி, சக்கைப்போடு போட்ட, ராக்ஸ்டார் படத்தை தழுவி, இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆனாலும், ஒரிஜினலில் சில மாற்றங்கள் செய்து, ஆந்திர ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், மசாலா பொடி தூவியுள்ளார் இயக்குனர் சுகுமார்.
இந்தப்படத்தில், மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார், கீர்த்தி சனான். சாயாஜி ஷிண்டே தான் வில்லன். காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கலவையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மகேஷ்பாபு தன் ரசிகர்களுக்கு படைக்கவுள்ள, செமத்தியான விருந்தாக இருக்குமாம்.
தமிழில் விஜய் தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடிக்கவைத்து அறிமுகப்படுத்தியதுபோல, மகேஷ்பாபுவின் மகன் கௌதம் இந்தப்படத்தில் சில காட்சிகளில் சிறுவயது மகேஷாக நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை லண்டனில் படமாக்கியுள்ளார்களாம்.
படத்திற்கு இசையமைப்பவர் தேவிஸ்ரீபிரசாத். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், மகேஷ்பாபுவின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது