‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதி, தற்போது அந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு கொலவெறி புகழ் அனிருத் இசை அமைத்துள்ளார்.
சில குறும்படங்களை இயக்கிய அனுபவத்தை வைத்து மட்டுமே காதல் கலந்த காமெடி படமாக இந்தப்படத்தை இயக்கியுள்ளார் கிருத்திகா. கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் சிவாவுக்கும், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ப்ரியா ஆனந்துக்கும் காதல் ஏற்படுகிறது. வெவ்வேறு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இடையே வரும் காதலும்,மோதலும் தான் படத்தின் பிரதானமான கதை.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட தீர்மானித்துள்ளனர்.