‘வாலு’வை முடிக்க சிம்பு தீவிரம்

77

சிம்பு நடித்துக்கொண்டிருப்பது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என இரண்டு படங்களில் மட்டும் தான். இதில் ‘வேட்டை மன்னன்’ படம் ஆரம்பித்தது 2011ல். அதன் பின் போன வருடம் ஆரம்பிக்கப்பட்டது தான் ‘வாலு’. புதுமுகம் விஜய் சந்தர் இயக்கும் இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தானம்.

மிகவும் மெதுவாக படம் எடுப்பவர்கள் என்று பெயர் வாங்கிய பாலிவுட்டிலேயே நடிகர் அக்ஷய் குமார் வருடத்திற்கு மூன்று படங்களுக்கு குறையாமல் ரிலீஸ் செய்துவிடுகிறார். இங்கே தனுஷ்கூட இந்த வருடத்தில் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து ரிலீஸ் செய்திருக்கிறார். மலையாளம் உட்பட இரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அவையும் ரிலீஸாகிவிட்டன.

இதனால் சிம்பு தற்போது தான் நடித்துவரும் ‘வாலு’ படத்தில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். சமீபத்தில்தான் இந்தப்படத்தில் இடம்பெறும் தனது ஓப்பனிங் சாங்கை முடித்தார் சிம்பு. அதுபோக இந்தப்படத்தில் இன்னும் மூன்று பாடலகளும் சிறிய அளவிலான வசன பகுதிகளும் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருக்கிறதாம்.

விரைவில் வெளிநாட்டில் இரண்டு பாடல்களை படமாக்க கிளம்புகிறார்கள் வாலு படக்குழுவினர். அதை முடித்துவந்த பின்னர் சென்னையில் ஒரு பாடல் ஷூட்டிங். அவ்வளவுதான்.. ‘வாலு’ வேலை ஓவர். 2014 ஆரம்பத்திலேயே படத்தை ரிலீஸ் செய்து புதுவருடத்தில் தன் கணக்கை வெற்றிகரமாக ஆரம்பிக்கவேண்டும் என தீர்மானித்துள்ளார் சிம்பு.

Leave A Reply

Your email address will not be published.