இதுவரை நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்துவந்த வைபவ் சோலோவாக களம் இறங்கியிருக்கும் படம் தான் ‘டமால் டுமீல்’. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் வைபவ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷின்டே, சார்லி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான ஸ்ரீ டைரக்டு செய்திருக்கிறார்.
தமன் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் வெங்கட்பிரபு, சீனு ராமசாமி,
கேயார், பாடகி உஷா உதூப் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.