ஏற்கனவே சுப்பிரமணியபுரம் படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் ‘வடகறி’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார். ‘கொலவெறி’ அனிருத் (இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதே அடைமொழியை சொல்வது?) இசையமைக்கிறார்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் அபாரமான இந்தப்படத்திற்காக சில காட்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார் இயக்குனர் சரவணராஜன். முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என தெரிவித்திருக்கிறார் க்ளவுட் நைன் சி.இ.ஓ.வான சுஷாந்த்.