எழில் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படம் கன்னட்த்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் தமிழில் டி.இமான் இசையைமைத்த ட்யூன்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தன்னிடம் முறையான அனுமதி பெறாமல், தனக்கு ஒரு தகவல்கூட அறிவிக்காமல் நடந்துள்ள இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் டி.இமான்.
“இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை கன்னடத்திற்கு விற்றபோது பாடல் உரிமையையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதன் இசையமைப்பாளரான என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காதது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து படத்தயாரிப்பாளர்களுடன் பேச உள்ளேன்” என்கிறார் டி.இமான்.