‘ஆரம்பம்’ படத்தில் தன் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் அஜீத். இன்னொருபக்கம் அவர் நடித்துவரும் ‘வீரம்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரையில் சிலநாட்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது அஜீத்துக்கு. ஒரு நாள் கேப் கிடைத்தாலே பெங்களூருக்கு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புபவர் தற்போது கிடைத்திருக்கும் இந்த விடுமுறையை என்ஜாய் பண்ண கனடாவுக்கு பறந்துவிட்டார்.
கூடவே யாரை அழைத்துப்போயிருக்கிறார் தெரியுமா? ஆரம்பம் படவேலைகளை முடித்துவிட்ட விஷ்ணுவர்தனையும், ‘பிரியாணி’ பட டென்ஷனில் இருந்து ரிலாக்ஸாக இருக்கும் ‘மங்காத்தா’ இயக்குனரையும், வீரம் படத்தில் தனது அன்புத் தம்பிகளில் ஒருவராக நடிக்கும் விதார்த்தையும் சேர்த்து அழைத்துக்கொண்டுதான் கனடாவுக்கு டூர் கிளம்பிப் போயிருக்கிறார் அஜீத். அஜீத்தின் இன்பச்சுற்றுலா கூட வித்தியாசமாக இருக்கிறதே..!