செப்-6ல் தெலுங்கு, இந்தியில் ராம்சரண் படம் ரிலீஸ்

66

கடந்த, 1973ல், இந்தியில், அமிதாப் பச்சனும், அவரது மனைவி ஜெயா பச்சனும் இணைந்து நடித்த படம் ஜஞ்சீர். தற்போது இந்த படத்தை இதே பெயரில் இந்தியிலும், தூபான் என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்துள்ளனர். இந்தப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சஞ்சய்தத், அதுல் குல்கர்னி, ஸ்ரீஹரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. இந்தப்படத்தை அபூர்வ லகியா என்பவர் இயக்கியுள்ளார்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நிழல் உலக தாதாவின் சதியால், பொய் வழக்கில் சிக்கி, ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து, நிழல் உலக தாதாவை பழிவாங்குவதற்காக அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான், படத்தின் பரபரக்க வைக்கும் கதை.

இந்தப்படத்தில் Dolby ATMOS என்ற புதிய சவுண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில், அதிலும் தெலுங்கு சினிமாவில், இந்தப்படத்தின் மூலம்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார்களாம். செப்டம்பர் 6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.