நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறோம். மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் கலாபவன் மணி. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் குவைத் சென்றுவிட்டு திரும்பியபோது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்கம் கொண்டுவந்ததாக கூறி தடுத்து நிறுத்தப்பட்டார்.
காரணம் அவர் கையில் அணிந்திருந்த காப்பு 181 கிராம் எடையிருந்தது. ஆனால் விதிப்படி 20 கிராம் கொண்டு வருவதற்குத்தான் அனுமதி. கோபத்தில் அதிகாரிகள் முன், காப்பை தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டார் கலாபவன் மணி.
இருந்தாலும் இது ஒன்றும் சினிமா இல்லையே..? மறுநாள் கலாபவன் மணிக்கு விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் வர, அங்கே சென்றவர் அது தங்கமுலாம் பூசிய காப்புதானே தவிர முழுக்க முழுக்க தங்கம் இல்லை என வாதாடி இருக்கிறார். கடைசியில் ஒருவழியாக 7000ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு காப்பை திரும்ப வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.