இன்று தமிழ்படங்கள் வெளியாகாத கறுப்பு வெள்ளிக்கிழமை

84

வழக்கமாக நமது தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆவது பல வருடமாக நடந்து வரும் நிகழ்வுதான். சூரியன் உதிக்க மறந்தாலும் கூட (கொஞ்சம் அதிகப்படியான உதாரணமோ?) வெள்ளிக்கிழமை படங்கள் ரிலீஸாக தவறுவதே இல்லை.

ஆனால் தமிழ்சினிமாவின் பக்கத்தில் இன்றைய வெள்ளிக்கிழமை ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. இன்று மற்ற மொழிப்படங்கள் தமிழில் ரிலீஸ் ஆனாலும் நேரடியான தமிழ்ப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இது உண்மையிலே ஆச்சர்யமான ஒன்றுதான்.

கடந்தவாரம் தான் தீபாவளி, ரிலீஸாகி ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு என மூன்று படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் பாண்டியநாடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் தியேட்டர்களில் இந்தப்படத்திற்கான காட்சிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்கள் கிடைக்காமல் இந்தவாரம் படங்களை ரிலீஸ் செய்ய நினைத்தவர்கள் பின் வாங்கியிருக்கிறார்கள் என தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.