‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆடியோ ரிலீஸை முடித்துவிட்டு தீபாவளி எப்போதுவரும் படத்தை ரிலீஸ் பண்ணலாம என தயார் நிலையில் காத்துக்கொண்டிருக்கிறது ஸ்டுடியோகிரீன் நிறுவனம். கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் என வலுவான கூட்டணியோடுதான் களம் இறங்குகிறார் இயக்குனர் எம்.ராஜேஸ். கார்த்தி நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் சினிமாவை பொறுத்தவரை இதுதான் அவருக்கு தலை தீபாவளி. ஆம்.. அவர் படம் தீபாவளி தினத்தில் வெளியாவது இதுதான் முதல்முறை என்பதால் தலை தீபாவளி என்பதுதான் சரி.
இந்தப்படத்தில் 1980களில் வருவது மாதிரியான ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப்பாடலுக்கு தினேஷ் மாஸ்டர்தான் நடனம் அமைத்திருக்கிறார். இதற்காக எண்பதுகளில் இருந்த நடனத்திற்கான ஸ்டெப்புகளை கற்றுக்கொண்டு அதன்பிறகு ஆடியுள்ளார் கார்த்தி. கூடவே ராதிகா ஆப்தேயும் ஆடியிருக்கும் இந்தப்பாடலுக்காக குதிரை சவாரியும் கற்றுக்கொண்டிருக்கிறார் கார்த்தி.
இந்தப்பாடலில் நடித்தபோது ரஜினி, கமல் படங்களில் நடிப்பது போல, அதேசமயம் காமெடியாகவும் இருந்தது என்கிறார் கார்த்தி. காரணம் இசையமைப்பாளர் தமன் 1980களில் வந்த பாடலை நினைவுபடுத்தும் விதத்தில் இந்தப்பாடலை உருவாக்கியிருக்கிறாராம். இந்தப்பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என அடித்துச்சொல்லுகிறார் கார்த்தி.