ஒரு படம் வெற்றிபெற்றால் அந்தபடத்தின் கூட்டணி அடுத்த படத்திலும் இணைவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த அடிப்படையில்தான் தயாரிப்பாளர் தனுஷ், சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், என ‘எதிர்நீச்சல்’ படத்தின் டீமும் அப்படியே அடுத்த படத்திலும் இணைந்திருக்கிறது. படத்தின் வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். படத்திற்கு இசையமைப்பது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை
படத்திற்கு தற்போது ‘டாணா’ என பெயர் வைத்திருக்கிறார்கள். ‘டாணா’ என்றால் போலீஸ் என்று அர்த்தமாம். கதாநாயகியாக காஜல் அகர்வால், தமன்னா, அமலாபால் இவர்களில் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்ஷிகாவுடன் ஜோடியாக நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு இனி தொடர்ந்து ஜாக்பாட் தான்.