இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொள்கிறார் என்றாலே அது நிச்சயம் ஸ்பெஷலாகத்தான் இருக்கும். அப்படி இளையராஜா இசையில் புது இயக்குனர் சுப்பு சுஜாதா இயக்கிய படம் தான் ‘தாண்டவக்கோனே’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தும் கூட பல்வேறு காரணங்களால் திரைக்கு வருவதில் சிக்கல் இருந்து வந்தது. தற்போது இயக்குனரும், தயாரிப்பளரும் அமர்ந்து பேசி சிக்கலுக்கு முடிவு கண்டுள்ளனர். ஒரு வழியாக பிரச்சனைகள் முடிந்து விரைவில் தாண்டவக்கோனே படத்தை திரையில் பார்க்கலாம் என்கிறார் இயக்குனர் சுப்புசுஜாதா.
ஒரு திருடன் எப்படி சாமியாராக மாறுகிறான் என்பதை இந்தப்படத்தின் கதையாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தில் நிறைய கமர்சியல் விஷயங்களுடன் இளையராஜாவின் பின்னனி இசையும் படத்தில் மிரட்டலாக வந்திருக்கிறதாம். அழகான மெலடி பாடலும், வித்தியாசமான லொக்கேசன்களும் படத்திற்கு பக்கபலமாக இருக்குமாம்.