சின்ன பட்ஜெட் படங்களுக்கு வழிவிட்ட தலைவா

74

தலைவா படம் ரிலீஸாவது தள்ளிப்போனாலும் போனது.. மீடியம் மற்றும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தியேட்டருக்கு கொண்டுவரும் வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டார்கள். அந்தவகையில் கடந்தவாரம் தலைவா வெளியாகாததால் அந்த சுழ்நிலையை பயன்படுத்தி தன்னுடைய 555 படத்தை வெளியிட்டார் இயக்குனர் சசி. படமும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட்-16) சுசீந்திரன் இயக்கி வெகுநாட்களாக கிடப்பில் இருக்கும் ஆதலால் காதல் செய்வீர் படமும் ரிலீஸாகிறது. எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள தேசிங்குராஜா படமும் பத்மாமகன் இயக்கியுள்ள நேற்று இன்று படமும் அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸாகின்றன. நேற்று இன்று படத்திலும் விமல்தான் கதாநாயகன்.

வரும் ஆகஸ்ட்-30ஆம் தேதி பொன்மாலைப்பொழுது, மூடர்கூடம், சுட்டகதை மற்றும் நீண்டநாட்களாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கமீன்கள் என நான்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தப்படங்கள் எல்லாமே ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டவை. இதுதான் இந்தப்படங்கள் ரிலீஸாவதற்கு சரியான நேரமும் கூட. தலைவா காட்டிய தயவால் இந்தப்படங்களுக்கு நல்லநேரம் பிறந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.