நம்புங்கள். ஒன்றல்ல..இரண்டல்ல.. பத்து ஹீரோயின்களுடன் நடிக்கிறார் சல்மான்கான். காஸனோவா என்ற ஒர் கேரக்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு பெண் பின்னாடியே விடாமல் சுற்றிவரும் ஆண் ஒருவன், அவள் தன் பக்கம் திரும்புகிறாள் என தெரிந்தவுடன் அவளை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணின் பின்னால் சுற்ற ஆரம்பித்து விடுவான். இதுதான் காஸனோவா கேரக்டர். 2005ல் சல்மான்கான் நடித்து வெளியான ‘நோ எண்ட்ரி’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு கதைதான்.
சல்மான்கானுடன் அனில்கபூர், இஷா தியோல், லாரா தத்தா, பிபாஷா பாசு நடித்திருந்த இந்தப்படத்தை அனீஸ் பாஷ்மி இயக்கிருந்தார். அனில்கபூரின் சகோதரரரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் ‘நோ எண்ட்ரி மெயின் எண்ட்ரி’ என்ற பெயரில் படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் போனிகபூர்.
இந்தப்படத்தில் தான் சல்மான்கானுக்கு ஜோடியாக பத்து ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த அனில்கபூரும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முதல்பாகத்தை இயக்கிய அனீஸ் பாஷ்மியே இந்தப்படத்தையும் இயக்குகிறார். பத்து ஹீரோயின்கள் யார் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது தயாரிப்பு தரப்பு.