நடிகர்கள் காதலில் விழுவது சகஜம். ஆனால் அதில் எத்தனை பேர் காதலித்த பெண்ணையே மணக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நடிகர்கள் காதலில் விழுந்தார்கள் என்று ஏகப்பட்ட செய்திகள் வரும். அதில் விரல் விட்டு எண்ணும் பேர் தான் காதலித்த பெண்ணையே மணந்திருப்பார்கள். அப்படிப்பட்ட மிகச்சிலரில் ஒருவர்தான் சூர்யா.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் ஆரம்பித்த நட்பு அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடிக்கும்போது காதலாக மாறியது. இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் 2006ஆம் வருடம் இதே நாளில் ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா.
சூர்யா ஜோதிகா தம்பதிகளின் மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்று வெற்றிகரமாக எட்டாவது ஆண்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு behind frames தனது திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.