துவண்டு கிடந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு புத்துணர்வு டானிக் தந்த படம்தான் ‘கோலி சோடா’. ஜனவரி-24ஆம் தேதி வெளியான இந்தப்படம் வெற்றிகரமாக 50வது நாளை கடந்து, இன்று 51வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, அதில் நடிப்பவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் சரி, வலுவான கதை இருந்தால் ரசிகர்கள் அந்தப்படத்தை தூக்கிவைத்து கொண்டாடுவார்கள் என்கிற உண்மைதான் ‘கோலி சோடா’ மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
ஒளிப்பதிவாளராக இருந்து ஒரு இயக்குனராக மாறிய விஜய் மில்டனுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம். படத்தின் குழந்தை நட்சத்திரங்கள் முதல் வில்லன்களாக நடித்த அனைவருக்கும், இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஓவ்வொருவருக்கும் இந்த வெற்றியில் சம பங்கு உண்டு.