மணிரத்னம் படத்தில் சுந்தரபாண்டியன் ‘பரஞ்சோதி’!

85

சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிகுமாரின் நண்பனாகவே வந்து திடீரென துரோகியாக மாறும் பரஞ்சோதியாக வந்து எல்லார் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டவர் சௌந்தரராஜா. சமீபத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் சிவகார்த்திகேயனின் கொள்கை பரப்புச் செயலாளராக வந்து கலகலக்க வைக்கிற அதே சௌந்தரராஜா தான். வேட்டை படத்தில் ஆர்யாவுடன் வந்துபோகும் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது சுந்தர பாண்டியன் படம் தான்.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் படப்பிடிப்பு பதினெட்டு வருடங்களுக்குமுன் மதுரையில் நடந்தபோது பிரகாஷ்ராஜ் தண்டாவாளத்தில் தலைவைத்து படுத்து ரயில் மறியலில் ஈட்டுபடும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வேடிக்கை பார்க்கவந்த இவருக்கு கூட்டத்தின் முன்னாள் நின்று ‘தமிழ் வாழ்க’ என்று கோஷம் போடும் கேரக்டர் கிடைத்ததாம். தற்போது ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்துவரும் சௌந்தரராஜா, இன்னும் பெயரிப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.

மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சௌந்தரராஜாவை சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டு படங்களில் நடிக்க அழைத்து வந்தது சினிமாவின் மீது அவருக்கு இருந்த தாகம்தான். கையில் 2 லட்சரூபாய் சம்பாதித்த வேலையை விட்டுவிட்டு இதெல்லாம் எதற்காக என்றால், “எனக்கு வேலையை விட விருப்பம்தான் முக்கியம். பணதிருப்தியைவிட மன திருப்திதான் முக்கியம். சம்பாத்தியத்தைவிட சந்தோஷம் தான் முக்கியம். வசதிகளை விட சுதந்திரம்தான் சொர்க்கம்” என்கிறார் சௌந்தரராஜா.

Leave A Reply

Your email address will not be published.