‘சலீம்’ தெலுங்கு ரீமேக்கில் விக்டரி வெங்கடேஷ்..!

98

‘ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு’ என ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. தெலுங்கு சூப்பர்ஹீரோ விக்டரி வெங்கடேஷுக்கு அருமையாக பொருந்தும். காரணம் பிற மொழிகளில் வெற்றிபெறும் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட்டடிப்பதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.

‘சந்திரமுகி’, ‘பாடிகார்டு’ படங்கள் எல்லாம் இவர் புண்ணியத்தில் தான் ரீமேக்காகி தெலுங்கு பேசின. அவ்வளவு ஏன் சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கின் பிளாக்பஸ்டர் ஹிட்டின் வெற்றியை ஆற அமர ருசிக்காமல அடுத்த படத்தின் ரீமேக்கிற்கு தாவிவிட்டார் வெங்கடேஷ்.

ஆம்.. கடந்த மாதம் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற  ‘சலீம்’ படத்தைப்பற்றி மற்றவர்கள் சொல்லக்கேட்ட வெங்கடேஷ், அந்தப்படத்தை தியேட்டரில் போய் பார்த்திருக்கிறார். விளைவு.. ‘சலீம்’ படத்தின் ரீமேக் ரைட்ஸ் இப்போது வெங்கடேஷ் கையில்.. வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை தமிழில் இயக்கிய நிர்மல் குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார்.

Comments are closed.