ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை கலாய்த்து ‘தமிழ் படம்’ என்ற படத்தை இயக்கின சி.எஸ்.அமுதன் இப்போது எடுத்து முடித்திருக்கும் இரண்டாவது படத்தின் பெயரே ’ரெண்டாவது படம்’தான். இதில் விமல், ரம்யா நம்பீசன், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் நடிக்கிறார்கள்.
இதுவரைக்கும் படத்தின் கதை என்னவென்று சொல்லாத அமுதன் வித்தியாசமான ட்ரெய்லர்களா ரிலீஸ் பண்ணி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார். இந்தப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த படத்தில் இன்னொரு புதிய காமெடி பாதையை போட்டிருக்கிறேன்’ என்கிறார் அமுதன்.