“சிவப்பு என்பது நம்ம பார்வைக்கு ஒரு கலராகத்தான் தெரியும். ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் கோபத்தின் அடையாளம் தான் சிவப்பு.. அதில் காதல், வறுமை, கோபம், கம்யூனிசம், வன்முறை என்று கலரை மீறிய அம்சங்களும் இருக்கிறது” என்கிறார் ‘சிவப்பு’ படத்தை இயக்கியுள்ள சத்யசிவா. இவர்தான் ‘கழுகு’ படத்தை இயக்கியவர்.
இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து இங்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திடாதா என ஏங்கும் இலங்கை தமிழர்களையும் கட்டுமானத் தொழிளார்களாக பணிபுரிபவர்களின் அவலங்களையும் இணைத்து உருவாகியுள்ள படம் தான் சிவப்பு.
கட்டுமானத்துறையின் மேஸ்திரியாக ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் தெலுங்கு ஹீரோ நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்க ரூபா மஞ்சரி கதாநாயகியாக நடித்திருக்கிறார். ரகுநந்தன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.