ஒரே பாடலில் நானூறு விதமான உடைகள் – ‘ரணம்’ படத்தில் ரணகளம்

109

வசந்த் டைரக்‌ஷனில் ரகுமான், கவுதமி நடிப்பில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் வெளியான படம் ‘நீ பாதி நான் பாதி’. இந்தப்படத்தில் ‘நிவேதா’ என்ற ஒரு பாடலில் மட்டும் நூறு விதமான உடைகளை அணிந்து நடித்திருப்பார் கவுதமி. அப்போது இந்த விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இப்போது அதை மிஞ்சும் விதமாக விஜயசேகரன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘ரணம்’ படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் ஹர்சன், பூனம்கவுர் நடிக்க 400 விதமான உடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப்படத்திற்காக மரியா மனோகர் இசையமைத்த “எங்கடா போனே ரோமியோ.. என்னடா ஆனே ரோமியோ” என்ற பாடல் காட்சி சமீபத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.